Latest News

அஜித், விஜய், சூர்யா மூன்று பேரும் மீண்டும் ஒன்றாக இணைவார்களா? 2018 ல்

அஜித், விஜய், சூர்யா இவர்கள் மூவருமே சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தான் அவரவருக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார்கள். பல பிளாக் பஸ்டர்கள் கொடுத்த இவர்கள் சினிமாவில் எத்தனை நடிகர்கள் புதிதாக வந்தாலும் இவர்களுக்கான மார்கெட் எகிறத்தான் செய்கிறது.
பல படங்களுக்கு மத்தியில் இவர்களின் படங்களும் வந்து புயல் கிளப்பி போவதும் உண்டு. தீபாவளிக்கு இவர்களின் படங்களும் வெளிவந்து கொண்டாட்டம் போட வைத்ததுண்டு.
விவேகத்தை தொடர்ந்து அஜித் சிவா இயக்கத்திலும், மெர்சலை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்திலும், டிஎஸ்கே வை தொடர்ந்து சூர்யா செல்வராகவனுடனும் படம் பண்ணப்போவது உறுதியாகிவிட்டது.
இதில் ஒற்றுமை என்ன வெனில் மூவரின் படங்களும் வரும் 2018 ஜனவரியில் தான் ஆரம்பிக்கிறது. ஒரு வேளை இவர்களின் படங்கள் அதே வருட தீபாவளிக்கு வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அப்படி வந்தால் மீண்டும் ட்ரண்ட் தான். ஆம்., 14 வருடங்களுக்கு முன் அதாவது 2003 ல் தீபாவளிக்கு அஜித்தின் ஆஞ்சனேயா, விஜய்யின் திருமலை, சூர்யாவின் பிதாமகன் என ஒரே நாளில் இறங்கி சாதனை படைத்தார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
அஜித், விஜய், சூர்யா மூன்று பேரும் மீண்டும் ஒன்றாக இணைவார்களா? 2018 ல் அஜித், விஜய், சூர்யா மூன்று பேரும் மீண்டும் ஒன்றாக இணைவார்களா? 2018 ல் Reviewed by AD on 21:45 Rating: 5

No comments:

Powered by Blogger.