நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் தனி ட்ராக் தான். நிதானமான சினிமா பயணம், போதுமான வெற்றிகள் என இவரது புரோஃபைல் சற்று வித்தியாசப்படும். கடின உழைப்பால் இப்போது ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் சூர்யா பல தடைகளை தாண்டி தான் வந்திருக்கிறார்.
போலிஸ்காரர்களை தன் காக்க காக்க படத்தால் திரும்பி பார்க்க வைத்தவர் என்பதை மறந்துவிடமுடியாது. ஆனாலும் தன் கட்டுடலலால் ஆணழகுக்கு தனி அடையாளம் காட்டியது என்னவோ அவரின் வாரணம் ஆயிரம் திரைப்படம் தான். அத்தனை ஆண்களையும் இப்படம் கவர்ந்தது.
இரு படத்திற்கும் ஒற்றுமை என்னவெனில் இயக்குனர் கௌதம் மேனன் என்பதே. ஐந்து வருடங்களுக்கு பிறகு 2008 ல் இப்படம் வெளியாக சிக்ஸ் பேக் என்ற புதிய உடலைமைப்பை அறிமுகப்படுத்தினார். பல ஆணழகன்கள் சிக்ஸ் பேக் வைப்பதற்கு இப்படம் ஒரு முக்கிய காரணம்.
சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா என மூன்று ஹீரோயின்கள் நடிக்க சூர்யா 2 வேடங்களில் கலக்கினார். Tamil Nadu State Film Awards, International Tamil Film Awards என பல விருதுகள் இப்படத்தை தேடி வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ரசிக்க வைக்கும் பாடல்களை ஹாரிஷ் ஜெயராஜ் இப்படத்தில் கொடுத்தார்.
சூர்யாவின் படங்களில் மைல் ஸ்டோனாக இருக்கும் இப்படம் இன்று ஒன்பதாம் ஆண்டை எட்டியிருக்கிறது. இதற்கென #9yearsofvaaranamaayiram என டேக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவை விரும்பும் ஆணழகன்களுக்கு இந்த நாளும் சூப்பர் நாளே!
Reviewed by AD
on
04:33
Rating:
Reviewed by AD
on
04:33
Rating:

No comments: