தமிழ் திரையுலகில் எல்லோரின் பேவரட் ஜோடி என்றால் சூர்யா, ஜோதிகா தான். இவர்கள் இருவரும் சுமார் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள்.
இந்நிலையில் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய், சூர்யாவுடன் ரமேஷ் கண்ணாவும் நடித்திருந்தார், அவர் அந்த படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் கூறுகையில் ‘சூர்யா நான் விஜய் மூவரும் படப்பிடிப்பில் இருந்த போது அருகில் தான் தெனாலி படத்தின் படப்பிடிப்பும் நடந்தது, நான் அந்த படத்திலும் நடித்தேன்.
அப்போது ப்ரண்ட்ஸ் ஷுட்டிங் முடிந்து தெனாலி ஷுட்டிங் செல்லும் போது ஜோதிகாவிடம், “மேடம் உங்களை சூர்யா கேட்டார்” என்று சொல்ல, ஜோதிகா சிரித்துக்கொண்டே “நானும் அவரை கேட்டேன் என்று சொல்லுங்கள்” என்று சொல்வார்.
அதை தொடர்ந்து ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் விஜய், சூர்யா-ஜோதிகாவை ஜாலியாக கிண்டல் செய்வார்’ என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
Reviewed by AD
on
21:44
Rating:
Reviewed by AD
on
21:44
Rating:

No comments: